states

img

நாளை விண்ணில் பாய்கிறது 2022 ஆம் ஆண்டின் முதல் செயற்கைக்கோள்

புவி கண்காணிப்புக்கான ‘இஓஎஸ்-04’ செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி –சி52 ராக்கெட் மூலம் நாளை (பிப்ரவரி 14) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.    

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்  உள்ள சதீஷ் தவண் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி –சி52 ராக்கெட் மூலம் ‘இஓஎஸ்-04’ என்ற செயற்கைக்கோள் நாளை அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) என்ற அதிநவீன ரேடாா் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது.

5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 529 கி.மீ. உயரம் கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன.  

இந்த ரேடாா் செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவிபுரியும்.  

மேலும் இந்த ஆண்டில் விண்வெளியில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. 

;